மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு தர பொன்.குமார் வலியுறுத்தல்

தமிழ்நாடு எல்லா நிலையிலும் முதன்மையாக, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

Nov 24, 2023 - 14:58
Nov 24, 2023 - 15:48
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஆக்கப்பூர்வ  ஒத்துழைப்பு தர  பொன்.குமார் வலியுறுத்தல்

மக்களை தேடி ஆட்சியாளர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன். குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளாக அளித்தனர்.தொடர்ந்து தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,“இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.கல்வி, சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த நாமக்கல் மாவட்ட தொழில்நுட்பம் இன்றைக்கு இந்தியாவிற்கு பயன்பட்டு இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை. இன்றைக்கு தமிழ்நாடு எல்லா நிலையிலும் முதன்மையாக, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு தர வேண்டும். முட்டுக்கட்டை போடும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கக் கூடாது. அதனால் பாதிக்கப்படுவது மக்களும், தொழிலாளர்களுக்கும் தான். எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம், மக்களை தேடித்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தாலுகாவில் வசிக்கும் மக்களையும் மாதத்திற்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மக்கள் குறைகளை தீர்வு காண வேண்டும் என்ற ஒரு அறிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.இதற்காக முதலமைச்சருக்கு கோடிக்கணக்கான அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow