சென்னைக்கு செல்ல ரயிலில் முண்டியடித்த கூட்டம்- லேசான தடியடி நடத்திய போலீஸ்
ரயில்வே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் முன்டியடித்து ஏறினார்கள்.கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை ரயில்வே போலிசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே சென்னையில் இருந்து கிளம்பினர். இந்த நிலையில் 3 நாள் பொங்கல் விழாவை கொண்டாடிவிட்டு ரயில்கள், பஸ்கள், விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் வரும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு பதில் பொத்தேரி ரயில் நிலையம் அருகே இறங்கி ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதேபோல் பேருந்துகளை போல் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் 5 நாட்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊரான தஞ்சைக்கு வந்தவர்கள் மீண்டும் சென்னை செல்ல தஞ்சை ரயில் நிலையத்தில் திரண்டனர்.
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில பயணம் செய்ய
பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் ரயில்வே போலீசார் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து ரயில் பெட்டிக்குள் ஏற வைத்தனர்.
நேரம் ஆக ஆக பயணிகள் கூட்டம் அதிகமானதால் சீட் பிடிக்க போலீஸ் கட்டுப்பாட்டை மீறி முண்டியடித்து கொண்டு பெட்டிக்குள் ஏறினார்கள்.இதன் காரணமாக ரயில்வே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?