குதிரை ரேக்ளா பந்தயத்தில் ஜாக்கி இல்லாமல் தனியாக வந்த குதிரையால் பரபரப்பு
ஜாக்கி இல்லாமல் குதிரை வண்டி மட்டும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மற்ற குதிரை வண்டிகளை முந்தி வந்தது குறிப்பிடத்தக்கது
திருவாரூரில் காணும் பொங்கல் விழாவில் குதிரை ரேக்ளா பந்தயம் நடக்கும் பொழுது ஜாக்கி இல்லாமல் தனியாக வந்த குதிரையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் தெற்குவீதியில் காணும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் 39ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாராத்தான் , சைக்கிள் பந்தயம், சிறிய குதிரை ரேக்ளா, நடு குதிரை ரேக்ளா, பெரிய குதிரை ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டிகள் தியாகராஜர் திருக்கோவில் நான்கு வீதிகளில் மூன்று முறை வலம் வந்தனர்.இதனிடையே குதிரை பந்தயம் துவங்கிய போது ஒருவர் மீது குதிரை வண்டி ஏறி இறங்கியது. இதில் லேசான காயத்துடன் தப்பினார்.
மேலும் குதிரை ரேக்ளா போட்டியின்போது கீழவீதி வளைவில் சென்றபோது குதிரை வண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. ஒரு குதிரை வண்டியின் ஜாக்கி கீழே விழுந்து விட்டார். இதனைத்தொடர்ந்து ஜாக்கி இல்லாமல் குதிரை வண்டி மட்டும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மற்ற குதிரை வண்டிகளை முந்தி வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?