நேரக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் டெண்டர் ரத்து - எச்சரித்த அமைச்சர்

இதுபோல் மீண்டும் நடந்தால் எச்சரிக்கை விடப்பட மாட்டாது என எச்சரிக்கை

Nov 25, 2023 - 11:54
Nov 25, 2023 - 12:03
நேரக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் டெண்டர் ரத்து - எச்சரித்த அமைச்சர்

பணியை விரைந்து முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என திருவாரூரில் அதிகாரிகளை அமைச்சர் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது 18 மாதங்களில் முழுமையாக திட்ட பணியை முடிக்க அறிவுறுத்திருந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் 27 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

50% பணிகளை கூட முடிக்காத ஒப்பந்தக்காரரை அழைத்து கண்டித்த அமைச்சர், "உங்கள் வீடு இங்கே இருந்தால் இப்படி தான் செய்வீர்களா.? 50 சதவீத பணிகளை கூட முடிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்..?

முதலமைச்சர் ஊரில் முதலமைச்சரே நேரடியாக இந்த பணிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு தாமதப்படுத்துவது சரியல்ல.

எவ்வளவு காலத்துக்குள் பணிகளை முடிப்பீர்கள் என ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு அறிக்கை தர வேண்டும்.இதுபோல் மீண்டும் நடந்தால் எச்சரிக்கை விடப்பட மாட்டாது, குறித்த காலத்தில் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எச்சரித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow