மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி... எங்கே வருகிறார்? எப்போது வருகிறார்?...

ஒருநாள் பயணமாக வருகிற 4-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Mar 2, 2024 - 10:47
மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி... எங்கே வருகிறார்? எப்போது வருகிறார்?...

வருகிற 4-ம் தேதி மதியம் 1.15 மணியளவில் மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். 

பிற்பகல் 2.50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் புறப்பட்டு, பிற்பகல் 3.20 மணியளவில் கல்பாக்கம் அனல்மின் நிலையம் செல்கிறார். 

பிற்பகல் 3.30மணி முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில், "பாரதிய நபிகியா வித்யுத் நிகாம்" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

மாலை 4.30 மணிக்கு கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, மாலை 5.10 மணிக்கு நந்தனம் YMCA அரங்கத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, 5.15 மணி முதல் 6.15 மணி வரை உரையாற்றுகிறார். 

மாலை 6.20 மணிக்கு நந்தனத்தில் இருந்து புறப்பட்டு, சாலை வழியாக சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 6.35 மணிக்கு தெலங்கானா மாநிலம் செல்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow