பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி தொடக்கம்... பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை...
பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், மே மாதம் முதல் வாரத்தில் இப்பணிகள் முடிவடையும் என தமிழக பாடநூல்கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, பெரியாரின் சிந்தனையை உடல் உள்ளம் முழுவதும் அமைச்சர் உதயநிதி தாங்கி நிற்பதாகக் கூறினார். அண்ணா கலைஞர் தளபதி ஸ்டாலின் என அனைத்து தலைவர்களின் மொத்த உருவமாக அவதாரமாக, அடுத்த தலைமுறையை காப்பாற்ற தயாராகி விட்டதால் தான் உதயநிதியை அனைவரும் டார்கெட் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், பாடநூல் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மே மாதம் இப்பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவசப் பொருட்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஜூன் மாதத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?