"5 வருஷமா எங்க இருந்நீங்க?" கதிர்ஆனந்தை கலங்கடித்த கருஞ்சட்டைகாரர்...

திமுக தேர்தல் பிரசாரத்தில் திமுகவை விமர்சித்த இளைஞர்

Apr 2, 2024 - 07:12
"5 வருஷமா எங்க இருந்நீங்க?" கதிர்ஆனந்தை கலங்கடித்த கருஞ்சட்டைகாரர்...

வேலூர் சத்துவாச்சாரியில் வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக நிர்வாகிகளை பார்த்து, ஐந்தாண்டுகளாக வரவில்லை இப்போது ஏன் வருகிறீர்கள் என ஒருவர் சரமாரி கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து சத்துவாச்சாரியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ஏழையின் சின்னம் உதயசூரியன் என சொல்றீங்களே. நீங்க பணக்காரராகவும் ஓட்டு போட்ட நாங்க ஏழையாகவும் இருக்கோம்னு வேதனையை கொட்டீருக்காரு.

தங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறுகிறதே என விழி பிதுங்கிய அங்கிருந்த உடன்பிறப்புகள், அந்த கருப்பு சட்டை அணிந்தவரை நோக்கி பாஞ்சியிருக்காங்க....

பிரசாரத்துக்கு போன இடத்துல, பிரச்னைய எதிர்பார்க்காத கதிர் ஆனந்துக்கு, இது ஒரு பூதாகரமான புது அனுபவம்னு தான் சொல்லனும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow