தூத்துக்குடி அதிமுக வேட்பாளருக்கு குட்டு.. "அக்கா மகனா, அப்பவும் அரசியல் அடிதான்..!"

மேடையில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் வாக்குவாதம்

Apr 2, 2024 - 06:53
தூத்துக்குடி அதிமுக வேட்பாளருக்கு குட்டு.. "அக்கா மகனா, அப்பவும் அரசியல் அடிதான்..!"

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பக்கத்துல வேட்பாளர் அறிமுக கூட்டத்துல முன்னாள் அமைச்சருக்கும், அதிமுக வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை போர் அந்தப்பக்கம் பெரும் பேசுபொருளா மாறியிருக்கு. அப்படி என்ன போர் நடந்தது? வாங்க பார்க்கலாம்.

தென்திருப்பறையில  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்துருக்கு. இதுல முன்னாள் அமைச்சர் சண்முக நாதனோட மருமகனும், வேட்பாளருமான சிவசாமி வேலுமணி மேடைப்பேச்சுங்கற பேருல வாய்க்கு வந்தபடி உளறி தள்ளியிருக்காரு. அதுல ஹைலைட்டா, என்ன ஜெயிக்க வச்சா, வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல்ல திருச்செந்தூர் தொகுதியில போட்டியிடும் வேட்பாளரோட செலவ நான் ஏத்துக்கிறேனு சொல்லியிருக்காரு.

இதக்கேட்டு அப்படியே ஷாக் ஆகிப்போன வேட்பாளரின் மாமாவும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கடுப்பாகி கடு,கடுக்க பக்கத்துல இருந்தவங்க கூல் பண்ணிருக்காங்க.

முதல்ல நீ வெற்றி பெறுவதற்கு ஒழுங்கா செலவு பண்ணு, அதுக்குஅப்புறம் அடுத்தவங்களுக்கு செலவு பண்ணலாம்னு ஒரு குட்டு, குட்டிருக்காரு.

உனக்கு சீட் தந்ததே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்னு பேசுன சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்லனு கோஷ்டி சண்டையையும் மேடையில நடத்துனாரு.

"நீ ஆணைய கிழிக்க வா, பூனையை கிழிக்க வா", "ஆற்ற கடல்ல விடவா"னு தேர்தல்ல ஜெயிக்கறதுக்கு முன்னாடியே நடக்கப்போறத சிந்திக்காதனு வாயாலயே மருமகனுக்கு சூடு போட்டுருக்காரு முன்னாள் அமைச்சரு.

ஒரு கட்டத்துல சூடு தாங்க முடியாம வேட்பாளர் சிவசாமி கோவத்துல கொப்பளிக்க ஆரம்பிச்சுட்டாரு.

மீண்டும் கடுப்பான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் "இந்தா மைக்க பிடி" னு சிவசாமி வேலுமணியிடம் மைக்க கொடுத்துட்டு சேர்ல உட்காந்துட்டாரு. 

மாமாவுக்கு எந்த வகையிலும் நான் கொரச்சல் இல்லனு பதிலுக்கு மைக்க அங்க இருக்குறவங்கட கொடுத்துட்டு கெத்தா சேர்ல உட்காந்துருக்காரு. 

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்னு கூட்டத்த கூட்டிடு, கடைசில மாமன் vs மருமகன் சண்டையாயிருக்கு. சொந்த அக்கா மகன் என்றாலும் அரசியல்ல தன்ன ஓவர் டேக் செய்துவிடக் கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சரு இப்படி நடந்துகிறதா அங்கிருந்தவங்க முணு, முணுத்திருக்காங்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow