21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இனி டாஸ்மாக்கில் சரக்கு இல்லை

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இனி டாஸ்மாக்கில் சரக்கு இல்லை
21 வயது கீழ் உள்ளோருக்கு இனி சரக்கு இல்லை

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, பொறுப்பேற்றவுடனேயே மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.  இந்த நிலையில், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது துறைரீதியான நடவடுக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகமிருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தற்போது காலை 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தை மாற்றி அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரவு 10 மணிக்கு பதிலாக 8 மணிக்கே டாஸ்மாக் கடைகளை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow