பக்தர்களுக்கு குட் நியூஸ்... இரண்டு சுற்றுலா ரயில் பயணங்களை அறிவித்த டூர் டைம்ஸ்!
தமிழகத்தில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி 16 நாள் சார்தாம் யாத்திரை மற்றும் இமயமலை நவ சக்தி பீட யாத்திரைக்கான இரண்டு சிறப்பு சுற்றுலா ரயில் பயணங்களை டூர் டைம்ஸ் அறிவித்துள்ளது.
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி சுற்றுலா நிறுவனமான டூர் டைம்ஸ் யாத்திரை, சுற்றுலா மற்றும் சிறப்பு சுற்றுலா ரயில் பயணங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து, 2026 அக்டோபர் 21 அன்று தமிழ்நாட்டில் இருந்து இரண்டு தனியார் சுற்றுலா ரயில் பயணங்களை அறிவித்துள்ளது. பயணிகள் 16 நாள் சார்தாம் யாத்திரை அல்லது 16 நாள் இமயமலை நவ சக்தி பீட யாத்திரை ஆகியவற்றில் தங்களுக்குப் பிடித்த பயணத்தை தேர்வு செய்து செல்லலாம்.
குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் குழு பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த சுற்றுலா ரயில் பயணங்கள், பல்வேறு விமானங்கள், ரயில்கள் ஹோட்டல்கள் மற்றும் உள்ளூர் போக்குவரத்துகளை தனித்தனியாக ஏற்பாடு செய்ய வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, எளிமையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகின்றன. இந்திய ரயில்வேயின் பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் இந்த பயணங்கள் இயக்கப்படுகின்றன. தகுதியான பயணிகளுக்கு 33* மானியமும் வழங்கப்படுகிறது.
சார்தாம் யாத்திரை சிறப்பு ரயில் மூலம் கங்கோத்ரி, யமுனோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் ஆகிய நான்கு புனித தலங்களுடன் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களும் தரிசிக்கப்படுகின்றன. சார்தாம் யாத்திரை தொகுப்பு கட்டணம் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ 44,950, 3AC-க்கு ரூ 49,950, 2AC-க்கு ரூ63,950 மற்றும் 1AC-க்கு ரூ 76,350 முதல் தொடங்குகிறது.
இரண்டாவது சிறப்பு ரயில் இமயமலை நவ சக்தி பீட யாத்திரை ஆகும். இதில் வைஷ்ணோ தேவி, சாமுண்டா தேவி, பிரஜேஷ்வரி தேவி, ஜ்வாலாமுகி, சிந்த்பூர்ணி, பக்லாமுகி, நைனா தேவி, கல்கா தேவி, மனசா தேவி ஆகிய ஒன்பது சக்தி பீடங்களுடன், குருக்ஷேத்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ், டெல்லி, மதுரா மற்றும் விரிந்தாவன் ஆகிய இடங்களும் 16 நாட்களில் தரிசிக்கப்படுகின்றன இந்த யாத்திரையின் கட்டணம் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ 51,750, 3AC-க்கு ரூ 57,650, 2AC-க்கு ரூ 73,950 மற்றும் 1AC-க்கு ரூ 84,750 முதல் தொடங்குகிறது.
இரு சுற்றுலா ரயில் பயணங்களுக்கும் முன்பதிவு டூர் டைம்ஸ் மூலம் மட்டுமே செய்ய முடியும். மேலும் தகவல்களுக்கு www.tourtimes.in இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 7305 85 85 85 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த இரண்டு சுற்றுலா ரயில்களும் கூடல்நகர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் எளிதாக இணைந்து பயணிக்க முடியும்.
இந்த சுற்றுலா தொகுப்பில் சிறப்பு சுற்றுலா ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடம், உள்ளூர் சுற்றுலா, அனைத்து இடமாற்ற வசதிகள், ரயிலிலும் வெளியிலும் உணவு, அனுபவமிக்க டூர் மேனேஜர்கள், ஒவ்வொரு பெட்டிக்கும் பாதுகாப்பு, பயணக் காப்பீடு மற்றும் முழு பயணத்திற்குமான உதவி ஆகியவை அடங்கும். குடும்பமாகப் பயணம் செய்பவர்களுக்கு ஒரே பெட்டி மற்றும் ஒரே பே Bay* பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்படுவதால் இது பெரிய குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இந்த சுற்றுலா ரயில் பயணத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று குறைந்த சுமைத் தொந்தரவு ஆகும். இரவு தங்கும் இடங்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றால் போதுமானது முக்கிய பயணப் பொதிகளை ரயிலிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவதால் ஒவ்வொரு இடத்திலும் சுமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய சிரமம் குறைகிறது.
அரசு ஊழியர்களுக்கான LTC/LFC வசதியும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கிடைக்கும் டூர் டைம்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25,000 *க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு யாத்திரை மற்றும் சுற்றுலா ரயில் சேவைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது மேலும் கலாச்சார பாரம்பரிய மற்றும் ஓய்வு சுற்றுலாக்கள், தனிப்பயன் சார்டர் சேவைகள் மற்றும் Golden Chariot, Maharajas' Express - போன்ற பிரீமியம் ரயில் பயணங்களுடனும் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு பயணங்களும் டூர் டைம்ஸ் நிறுவனம் நேரடியாக இயக்கும் தனியார் சுற்றுலா ரயில் சேவைகள் ஆகும்; இவை IRCTC மூலம் இயக்கப்படும் சுற்றுலாக்கள் அல்ல. இதன் மூலம் பயணிகளுக்கு தனிப்பட்ட டூர் மேலாண்மை, சிறந்த விருந்தோம்பல் மற்றும் முழு பயணத்திலும் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுகின்றன.
சார்தாம் யாத்திரை சிறப்பு ரயில் மற்றும் இமயமலை நவ சக்தி பீட யாத்திரை அனுபவத்தை விரும்பும் பக்தர்கள் வசதி, பாதுகாப்பு மற்றும் ஆன்மிக நிறைவை முன்னிறுத்தி சிறப்பாகத் திட்டமிடப்பட்ட இந்த சுற்றுலா ரயில் பயணங்களை தேர்வு செய்து மறக்க முடியாத ஆன்மிக அனுபவத்தை பெறலாம்.
What's Your Reaction?