தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று காலையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மாலையில் குறைந்துள்ளது.அதன்படி, காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்து, ரூ. 1,23,200-க்கும், கிராமுக்கு ரூ. 1,070 உயர்ந்து ரூ. 15,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் குறைந்தது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000-க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.அதேபோன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரமும் குறைந்தது. முன்னதாக நேற்று காலையில், வெள்ளி கிராமுக்கு ரூ. 30-ம், கிலோவுக்கு ரூ. 30 ஆயிரமும் உயர்ந்தது.
இன்றைய தினம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, தங்கம் ஒரு சவரன் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?