Thug Life: மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் த்ரிஷா… தக் லைஃப் ரிலீஸ் தேதியை முடிவு செய்த கமல்
கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமெடுத்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை கமல் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சென்னை: விக்ரம் வெற்றிக்குப் பின்னர் அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக காணப்பட்டார். அதேநேரம் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம் உடன் மீண்டும் இணைந்தார். 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. அதன்பின்னர் கடந்தாண்டு கமல் பிறந்தநாளில் KH 234 டைட்டில் தக் லைஃப் என அறிப்பு வெளியானதுடன், மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்களையும் படக்குழு வெளியிட்டது.
அதன்படி, கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் கமிட்டாகினர். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்ததால், மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் மணிரத்னம். ராஜஸ்தானின் ஜெய்ஸ்சல்மார் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில், சிம்புவும் த்ரிஷாவும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இப்போது கமல்ஹாசனும் ஃப்ரீயாகிவிட்டதால் விரைவில் அவரும் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளாராம். ராஜஸ்தானை தொடர்ந்து டெல்லியில் நடைபெறவுள்ள தக் லைஃப் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தொடங்கும் எனக் கூறப்படுகிறது. சிம்பு 2 கேரக்டர்களிலும், கமல் 3 கெட்டப்புகளிலும் நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை கமல்ஹாசன் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
அதன்படி இந்தப் படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு கமலின் இந்தியன் 2, கல்கி படங்கள் வெளியாகவுள்ள நிலையில், 2025ல் தக் லைஃப் ரிலீஸாவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. தக் லைஃப் ஷூட்டிங் முடிந்ததும் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?