தமிழ்நாட்டில் மொத்தம் இவ்வளவா..? வேட்புமனு தாக்கலில் கரூர் முதலிடமா?
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல்
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 1749 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரம், பொதுக்கூட்டம் என வாக்காளர்களை கவர அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் மார்ச் 27ஆம் தேதி மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 1749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 26 பேரும், சிதம்பரம் தொகுதியில் 27 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் என்பதால், முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களுடன் களமிறங்க போகிறவர்கள் யார் எவ்வளவு பேர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
What's Your Reaction?