பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.. எட்டாம் வகுப்பு குடிமையியல் படத்தில் கருணாநிதி பாடம்

9 மற்றும் 10ஆம் வகுப்புகளை தொடர்ந்து 8 ஆம் வகுப்பிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வந்த கலைஞரின் திட்டம் இந்தியாவுக்கே முன்னோடி 8ம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் பாடப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

May 15, 2024 - 17:20
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.. எட்டாம் வகுப்பு குடிமையியல் படத்தில் கருணாநிதி பாடம்

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி அவர்கள் பன்முக தன்மை கொண்டவர் என்பதை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உள்ளம் கொண்ட கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக்கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செந்தமிழ் கலைஞர், ஏற்றமுள தமிழில் இன்றுமுள கலைஞர் என மேற்கண்ட தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகளில் அவர் செய்த சாதனைகள் பாடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது

மேலும் அவர் பணியாற்றிய திரைப்படங்களில் சமூக கருத்துகளை எடுத்துரைத்த திரைப்படங்கள் சிலவும் பாடப்புத்தகத்தில் இட.ம் பெற்றுள்ளது. மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். 

இதனிடையே எட்டாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் பெண்ணுரிமை சார்ந்த சட்டங்கள் என்கின்ற பாடத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம்பெற்றுள்ளது. 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருணாநிதி கொண்டு வந்த இந்த சட்டம் பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் தமிழ்நாடு முனைப்புடன் செயல்படுகிறது எனப்பதற்கு உதாரணம் என பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow