தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்- பேருந்துகள் இயக்கம்
200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று இரண்டாவது நாளாகவும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்று சென்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் உடனடியாக போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இருப்பினும் தஞ்சாவூரில் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக போக்குவரத்து சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?