உகாதி பண்டிகை.. களைகட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில்.. என்னென்ன ஏற்பாடுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உகாதி பண்டிகைக்கு தயாராகி வருகிறது. இதனையொட்டி இன்று காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால் 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

Apr 2, 2024 - 10:09
உகாதி பண்டிகை.. களைகட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில்.. என்னென்ன ஏற்பாடுகள்

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் உகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9 தேதி உகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆஸ்தானம்  நடைபெறள்ளது. இதையொட்டி  இன்று காலை சுப்ரபாத சேவை மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிதகு 6 மணி முதல் 11 மணி வரை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடைபெற்றது. இதனால்  பக்தர்கள்  6 மணி நேரத்துக்கு பிறகு 11 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

 ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. 

இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றன. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி ,   மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருமலை திருப்பதியில் வரும் 9ம் தேதி உகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு சுப்பரபாத சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை விமான பிரகாரம் மற்றும் கொடி மரத்தைச் சுற்றி சுவாமி உலா வந்து கோவிலுக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 9ஆம் தேதியன்று மலையப்பசுவாமி முன்னிலையில் புது வருட பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏழுமலையான் கோவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. புத்தாண்டு நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அன்றைய தினம் ஆர்ஜித சேவை மற்றும் ஊஞ்சல் சேவை உள்ளிட்டவைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow