"கட்டுக்கட்டா பணம் இருக்கு... இப்போ போனால் பிடிச்சுடலாம்..!" பிளான் போட்டு பல்பு வாங்கிய திமுக...

ஐஜேக கட்சியினர் பணம் வைத்திருப்பதாக விடுதியில் காவல்துறை சோதனை...

Apr 2, 2024 - 09:25
"கட்டுக்கட்டா பணம் இருக்கு... இப்போ போனால் பிடிச்சுடலாம்..!"   பிளான் போட்டு பல்பு வாங்கிய திமுக...

திருச்சி மாவட்டம் முசிறி பக்கத்துல ஓட்டுக்கு பணம் கொடுக்க லாட்ஜில ஐ.ஜே.க கட்சியினர் கட்டுக் கட்டா பணம் வச்சிருப்பதாக திமுக உடன்பிறப்புகள் தேர்தல் பறக்கும்படைக்கு தூது சொல்லிருக்காங்க. அவங்களோட இந்த பிளான் என்ன ஆச்ச்சுனு, டீட்டெய்லா பார்ப்போம்...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில அங்கம் வைக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில போட்டியிடுறாரு. அந்த பக்கம் திமுகவுல அமைச்சர் கே.என். நேரு தனது மகன் அருண் நேருவை இறக்கிவிட்டுருக்காரு. 

பெரம்பலூர் தொகுதிய பொருத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி-ன்னு, Race track நாலாக இருந்தாலும், நெக் டு நெக் போட்டினு பார்த்தால் திமுகவுக்கும், பாஜக கூட்டணிக்கும்தான்.

நிலைமை இப்படி இருக்க, எப்படியாவது தேர்தலில் ஜெயிச்சிடனும்னு வேட்பாளர்கள் ஃபுள் எஃபோர்ட் போட்டு வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. 

இந்த நிலையில, திமுக-வ சேர்ந்த உடன்பிறப்பு ஒருத்தரு, போலீசுக்கு போன் பண்ணி, "அலோ இன்ஸ்பெக்டர்  ஐயா-வா"னு கேட்டுடு... ஐயா ஒரு ரகசிய தகவல் கிடச்சிருக்குனு சொல்லி... ஐ.கே.கே.காரங்க ஓட்டுக்கு பணம் கொடுக்க கட்டுக் கட்டாக அடுக்கி வச்சிருக்காங்க. இப்ப.. இந்த நேரத்துல உடனே போனா கையும், களவுமா புடிச்சிறலாம்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொல்லிருக்காரு.

இந்த தகவல கேட்டதும், சைரன் வச்ச டாடா சுமோவுல, முசிறி அருகே தொட்டியம் யூனியன் ஆஃபிசுக்கு எதிர உள்ள விடுதிக்கு போயிருக்காங்க போலீஸ். வண்டி கதவ டாமாலுனு சாத்திடு, விடுதிய நோக்கி ஓடிய போலீசார், ரூம் பாய கூப்பிட்டு, ரூம திறந்து செக் பண்ணிருக்காங்க.

பாத் ரூம் முதல் பெட்டுக்கு கீழ வர அலசி ஆராய்ந்த போலீசுக்கு, 4, 5 அழுக்கு துணி மட்டுமே கிடச்சிருக்கு.

ஐயா... இந்தா இருக்குனு கட்டிலுக்கு கீழ இருந்த ரெண்டு Bag-அ எடுத்து பெட்டு மேல வச்சிருக்காரு ஏட்டய்யா. ஒருவழியா மாட்டிக்கிச்சுனு, பேக் ஜிப் சிக்காம துறந்து பார்த்த போலீஸ், ஸ்டன்னாகி நின்னுருக்காங்க. அந்த பேக்குல, 4, 5 சட்ட,  2, 3 உள்ளாடையும் மட்டுமே இருந்திருக்கு.

போனில் உடன் பிறப்பு சொன்ன கதையில் ஒரு வரி கூட விடுதியில இல்லாம, வந்த வழியா திரும்பி போயிருக்காங்க போலீசார்.

போலீஸ் ரெய்டு செய்திய கேட்டு, விடுதி முன்னாடி குவிஞ்ச மக்கள், போலீசுக்கு ரூமர் கால போட்டுட்டு, ரூட்ட மாத்தி, எவன் எந்த வழியா பணத்த எடுத்துடு போனானோன்னு சலம்பியிருக்காங்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow