VidaaMuyarchi: விடாமுயற்சி ரிலீஸ் தேதி..? அடுத்தடுத்து அப்டேட்... அஜித் ரசிகர்களுக்கு தரமான செய்கை!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கிய நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Jun 29, 2024 - 13:34
VidaaMuyarchi: விடாமுயற்சி ரிலீஸ் தேதி..? அடுத்தடுத்து அப்டேட்... அஜித் ரசிகர்களுக்கு தரமான செய்கை!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் அஜித் நடிப்பது குறிப்பிடத்தக்கது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென இந்தப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டதால், குட் பேட் அக்லியில் பிஸியாகிவிட்டார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில், அஜித்தின் காட்சிகள் மட்டும் ஷூட் செய்யப்பட்டுள்ளதாம். 

இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால் குட் பேட் அக்லி படப்பிடிப்பை அசுர வேகத்தில் நடத்தி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதேநேரம் இந்தப் படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனாலும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இரு தினங்களுக்கு முன்னர் வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர் இதுவரை 62 மில்லியன் பார்வைகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. 

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இதுகுறித்து மேக்கிங் வீடியோவுடன் அப்டேட் கொடுத்த படக்குழு, அடுத்தும் ஒரு சர்ப்ரைஸுடன் ரெடியாகிவிட்டது. இதுவரை இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி உட்பட முக்கியமான அப்டேட்கள் எதுவும் வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாக இருந்த நிலையில், நாளை மாலை 7.03 மணிக்கு விடாமுயற்சி அப்டேட் வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. குட் பேட் அக்லியை தொடர்ந்து விடாமுயற்சி அப்டேட்டும் வெளியாகவிருப்பதால், அஜித் ரசிகர்கள் வைப் மோடில் உள்ளனர். 

நாளை வெளியாகவுள்ள அப்டேட், விடாமுயற்சி ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. அதேபோல், விடாமுயற்சி படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் அக்டோபர் 10ம் தேதி வெளியாகின்றன. விஜய்யின் தி கோட் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவிருந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டிசம்பர் ரிலீஸுக்கு சென்றுவிட்டது. இதனால் தீபாவளி அல்லது ஆகஸ்ட் 15 என இந்த இரண்டில் ஏதாவது ஒரு நாளில் விடாமுயற்சி ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow