சட்டமன்றத்தில் முறைப்படி எம்எல்ஏவாக விஜய், உதயநிதி, எடப்பாடி பங்கேற்பு
தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக முதல்வர் விஜய், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக நேற்று விஜய் பெறுப்பேற்று கொண்டார். அவரை தொடர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில். தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது.
இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களாக உறுதிமொழி ஏற்றனர்.இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இதனிடையே முதலமைச்சராக நேற்று பதவியேற்கும் போது, ‘ஆண்டவன் மீது ஆணையாக..’ என பதவியேற்றுக் கொண்ட விஜய், இன்று சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்..’ என கூறி உறுதிமொழி ஏற்று கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் "உளமாற" என்று கூறியே உறுதிமொழி ஏற்று வருகின்றனர். அதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எம்எல்ஏவாக பதவியற்று கொண்டனர்.
What's Your Reaction?