குக் வித் கோமாளி vs டாப் குக்கு டூப் குக்கு.. போட்டா போட்டி

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு என்றைக்குமே வரவேற்பு அதிகம். பிரபல சமையல் கலைஞர்கள் அந்த நிகழ்ச்சியை நடத்தினால் அதை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். விஜய் டிவியில் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Apr 30, 2024 - 09:45
Apr 30, 2024 - 11:38
குக் வித் கோமாளி vs டாப் குக்கு டூப் குக்கு..  போட்டா போட்டி

ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே விஜய் டிவிதான். அந்த அளவிற்கு விதம் விதமாக யோசிப்பார்கள். அழுகாச்சி சீரியல்கள் போரடித்துப்போனவர்களுக்கு ரியாலிட்டி ஷோக்கள் வரப்பிரசாதம். அதுவும் சமையல் நிகழ்ச்சியை சந்தோஷத்தை தரக்கூடியதாக இருந்தால் விடுவார்களா ரசிகர்கள். அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

4 சீசன்களை வெற்றிகரமாக கடந்தது குக் வித் கோமாளி. செஃப் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களை விட அவர்களுக்கு உதவியாக வரும் கோமாளிகள்தான் பலரையும் ரசித்து சிரிக்க வைத்தனர்.  'குக் வித் கோமாளி'யின் 5வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகியது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 

5வது சீசனில் செஃப் தாமு உடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், சிங்கர் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் வெங்கடேஷ் பட் இல்லாமல் நிகழ்ச்சி முழுமையாக இல்லை என்று விமர்சித்துள்ளனர். ஆனால் வெங்கடேஷ் பட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் நடத்த இருக்கிறார். 

இதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் பங்கேற்ற  பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். ஜி.பி முத்து, தீபா என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கோமாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் 

முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட வெங்கடேஷ் பட் 'எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என்னை மிஸ் செய்வது நீங்கள் அனைவரும் எனக்காக அனுப்பிய மெசேஜ் இதையெல்லாம் பார்க்கும் போது நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கடவுள் என்னை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று தோன்றுகிறது மிகவும் நன்றி உங்களை என்றும் ஏமாற்ற மாட்டேன் என்றும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

என்னுடைய வாழ்வின் துடிப்பே நீங்கள்தான் உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது எட்டு மணி முதல் சன் டிவி பாருங்கள் உங்களுக்கு அது தெரிய வரும் என்று கூறியிருந்தார். அவர் தனது புதிய நிகழ்ச்சியை பற்றிதான் அப்படி கூறியிருக்கிறார் என்று புரோமோ பார்த்த பல ரசிகர்கள் புரிந்து கொண்டனர். குக்கு வித் கோமாளிக்கு சரியான போட்டிய டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி அமையுமா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow