Maharaja Box Office: மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி... மகாராஜா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா நேற்று முதல் திரையரங்குகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 1915க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹீரோ, வில்லன் என வெரைட்டியாக நடித்து வந்தார் விஜய் சேதுபதி. விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் பேட்ட, கமல்ஹாசனின் விக்ரம், ஷாருக்கானின் ஜவான் என விஜய் சேதுபதியின் வில்லன் பயணம் வெறித்தனமாக இருந்தது. ஜவான் ரிலீஸுக்குப் பின்னர் இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். இதனால் இனி விஜய் சேதுபதியை ஹீரோவாக மட்டுமே பார்க்க முடியும் என சொல்லப்பட்டது. எனவே ஹீரோவாக மாஸ்ஸான ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்த விஜய் சேதுபதி, மகாராஜாவை தனது 50வது படமாக ரிலீஸ் செய்துள்ளார்.
அதேநேரம் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே விஜய் சேதுபதிக்கு கை கொடுத்தன. அவர் முன்பைப் போல ஹீரோ மெட்டீரியலுக்கான கதைகளை சரியாக செலக்ட் செய்வதில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது மகாராஜா திரைப்படம். படம் வெளியாகும் முன்பே ப்ரஸ் ஷோவில் பாசிட்டிவாக விமர்சனம் கிடைத்திருந்தது. அதனால் முதல் நாளான நேற்று மகாராஜா படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் 90 சதவீதம் வரை ஃபுல் ஆகியிருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் விஜய் சேதுபதிக்கு கை கொடுத்துள்ளது மகாராஜா.
அதன்படி இந்தப் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 7 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களும் மகாராஜா படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளதால், வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் பாக்ஸ் ஆபிஸில் மகாராஜாவுக்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சனி, ஞாயிறுகளில் மகாராஜா 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்யலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?