கடலூரில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் பிரபாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

Jan 11, 2024 - 17:35
Jan 11, 2024 - 18:55
கடலூரில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

கடலூர் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம்,  ரெட்டிசாவடி அருகே உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சீனு, தனது இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி, விண்ணப்பம் செய்தார்.

இதற்காக மதலபட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் (45) என்பவரை அணுகிய போது,அவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.40,000 லஞ்சம் கேட்டுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனு இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சீனு, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். 

அப்போது பிரபாகரன் அந்த பணத்தை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் பிரபாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் அவரை கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow