Vishal: “நான் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க..” ரத்னம் ப்ரோமோஷனில் விஷால் எமோஷனல்!

திருச்சியில் நடைபெற்ற ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால், இயக்குநர் ஹரி கலந்துகொண்டனர். அப்போது அரசியல் குறித்து விஷால் பேசியது வைரலாகி வருகிறது.

Apr 23, 2024 - 16:02
Apr 23, 2024 - 16:29
Vishal: “நான் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க..” ரத்னம் ப்ரோமோஷனில் விஷால் எமோஷனல்!

திருச்சி:  விஜய் அரசியல் கட்சி அறிவித்த சில தினங்களில், விஷாலும் அரசியலில் களமிறங்கவுள்ளதாக அதிரடி காட்டினார். அதேபோல், நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். விஷால் சைக்கிளில் சென்ற போட்டோஸ், வீடியோஸ் சோஷியல் மீடியாக்களில் வைரலானாலும், ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் இந்த வாரம் 26ம் தேதி வெளியாகிறது.  

இப்படத்தின் சில காட்சிகள் திருச்சி அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டன. இதனையடுத்து ரத்னம் ப்ரோமோஷன் நிகழ்ச்சி திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷால், இயக்குநர் ஹரி இருவரும் மாணவ, மாணவிகள் மத்தியில் உரை ஆற்றினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால், சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.  

மேலும், விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஷால், விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். ஏற்கனவே இருக்குற கொடியும் கட்சிகளும் போதும். இருக்குறவங்க நல்லது பண்ணா, நானும் அரசியலுக்கு வரவேண்டிய அவசியல் இருக்காது. அப்படி இல்லாமல் அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் எனக் கூறினார்.  

அதேபோல், வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன் பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.  அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஹரி, விஜய்யின் டேட்ஸ் கிடைத்தால் உடனே படம் இயக்கலாம், அவருக்காக கதை ரெடியாக உள்ளது என்றார்.  

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய ஹரி, அரசியல் நல்லது தான், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர் சேவை செய்கிறேன் என்பது போற்றப்பட வேண்டிய தான். அரசியல்வாதிகளே இதனை சந்தோஷமாக பெரிய விஷயமாக கருதுகின்றனர். நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்‌ என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow