இந்தியா - நியூசிலாந்து டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

Oct 20, 2024 - 22:00
இந்தியா - நியூசிலாந்து டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்
washington sundar

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்த நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த சரிவிலிருந்து மீண்டு எழுந்து 462 ரன்கள் அடித்திருந்தது. முதல் இன்னிங்ஸைத் தவற விட்டதால் நியூசிலாந்திடம் தோற்றது. இனி அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால்தான் கோப்பையை வெல்ல முடியும். இந்நிலையில் இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவை என்கிற நிலையில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சிக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தில்லிக்கு எதிராக 152 ரன்கள் குவித்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிகெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணி காபாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததில் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு முக்கியமானது. தான் அறிமுகமாகிய டெஸ்ட் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது அவருக்கு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது. 

வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதை பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் அறிவித்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக புனேவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் விளையாடவிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறது. யுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த விளையாடவிருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைக் கொண்ட அணி விளையாடவிருக்கிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow