தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்? நாளை மாலை 6.30 மணிக்கு தெரியும் 

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்பது குறித்து நாளை மாலை 6.30 மணிக்கு கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது. 

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்? நாளை மாலை 6.30 மணிக்கு தெரியும் 
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 9-ந்தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ந்தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மேற்கொள்ளவோ அல்லது அவற்றை வெளியிடவோ கூடாது என்று அறிவித்து இருந்தது.

இந்த காலகட்டத்தில் கருத்து கணிப்புகளை நடத்துவது அல்லது அவற்றை வெளியிடுவது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 126-ஏ பிரிவை மீறுவது ஆகும். இதற்கு, 2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.

மேற்கு வங்கத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவடந்த பின்னர் தேர்தல் கருத்துக்கணிப்புகளை 6.30 மணிக்கு வெளியிடலாம். அந்த வகையில் ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் கருத்துக்கணிப்பை எடுத்து வைத்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதில் தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்க போவது யார் என்பது தெரிய வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow