நீங்களும் அப்படித்தானா? இல்ல வேற மாதிரியா!: நம்பிக்கையை காப்பாற்றுவாரா கமிஷனர்?
இலவச டோல் ஃப்ரீ எண் அறிமுகம் செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
நூறு வார்டுகளுடன், தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சியாக விளங்குகிறது கோயமுத்தூர். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பல பள்ளிகள் இயங்குகின்றன. ஒரு காலத்தில் கோவையில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் மிக சிறப்பாக இருந்த நிலையில் பள்ளிகளும் அருமையான வசதிகளுடன் செயல்பட்டன.
ஆனால் கடந்த சில வருடங்களாக கோவை மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் அத்தனையும் சீர்கெட்டு போயுள்ள நிலையில், பள்ளிகளிலும் பெஞ்ச் முதல் கழிவறை வரை அத்தனை விஷயங்களிலும் பல்வேறு வசதி குறைவுகள், சிக்கல்கள்.
எவ்வளோ கோரிக்கைகள், கெஞ்சல்கள், போராட்டங்கள் வைக்கப்பட்டும், நடத்தப்பட்டும் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும், மாறுதலும் இல்லாத நிலை. கோவை மாநகராட்சியின் கமிஷனர்களாக இருந்தவர்கள் மற்ற விஷயங்களில் இல்லையென்றாலும் அட்லீஸ்ட் பள்ளிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்பதே எல்லோருடைய கோரிக்கையும்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார் சிவகுரு பிரபாகரன். மாநகராட்சியின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி சார்பான மக்கள் நல விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வரும் முனைப்பில் உள்ளார் அவர். அந்த வகையில், மாநகராட்சி பள்ளிகளுக்கு திடீர் விசிட் செய்து ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
சமீபத்தில் 45வது வார்டு குப்பகோணம்புதூர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றவர் பத்தாம் வகுப்பறைக்கு சென்று அங்கே எடுக்கப்படும் பாடங்களை கவனித்தார். பின், தேர்வில் நூறு சதவீதம் மதிப்பெண்களை பெற வேண்டும்! என்று அறிவுரை வழங்கினார்.அதேப்போல், கோவை மாநகராட்சியின் பள்ளி மாணவ, மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக இலவச டோல் ஃப்ரீ எண் அறிமுகம் செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
கமிஷனரின் இந்த அதிரடிகள் ஒரு புறம் உற்சாகம் தந்தாலும் கூட, சமூக செயற்பாட்டாளர்களோ, ‘எல்லா கமிஷனர்களும் புதுசா பதவிக்கு வந்ததும் இப்படியான அதிரடிகளை காட்டுறாங்க. அப்புறம் அப்படியே வேலைபளுவுல மறந்துடுறாங்க. எந்த சிக்கலும் தீராம அப்படியேதான் இருக்குது. நீங்களும் அப்படியில்லாமல், அறிவிச்ச திட்டங்களை நிறைவேற்றுறது மட்டுமில்லாமல், அது சிறப்பா தொடருதாண்ணும் கவனிக்கணும். நீஙக் செய்வீங்கன்னு நாங்க நம்புறோம்’ என்கிறார்கள்.
புது கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இந்த நம்பிக்கையை காப்பாற்றவார் என நம்புவோம்!
-ஷக்தி
What's Your Reaction?