ஜாஃபர் சாதிக் வங்கி கணக்குள் முடக்கம்... போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் அடுத்த ஸ்கெச்...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் போதைப் பொருள் தடுப்பு போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை, அண்மையில் டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தது. அதில் சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், திமுக முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாஃபர் சாதிக் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அவரை பிடிக்க டெல்லி போலீசார் விரைந்த நிலையில், இதனை அறிந்த அவர் தலைமரைவானார். இந்த செய்தி வெளியானதும் திமுகவில் இருந்து அவர் விலக்கப்படுவதாக தலைமை அறிவித்தது. ஜாபர் சாதிக்கோடு சேர்த்து மேலும் பலரை இந்த வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் சாந்தோம் அருணாச்சலம் சாலையில் உள்ள ஜாபர் சாதிக்கின் இல்லத்தில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில், பின்பு சீல் வைக்கப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?