சென்னையில் பள்ளத்தால் பறிப்போன உயிர்- சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி
தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையில் இருந்த பள்ளத்தை மண் போட்டு மூடினர்.
சென்னையில் மூடாபடாத பள்ளத்தில் தவறிவிழுந்ததில் மாநகர போக்குவரத்து ஓட்டுநர் மீது பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் மாநகர பேருந்து ஓட்டுநர் முருகேசன் (55), என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பீனிக்ஸ் மால் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்காமல் இருக்க பிரேக் பிடித்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் வலது பக்கம் விழுந்த முருகேசன் மீது மாநகர பேருந்து சக்கரம் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனால் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.உடனடியாக பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டார்.
பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையில் இருந்த பள்ளத்தை மண் போட்டு மூடினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?