உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தலைமைச் செயலாளரிடம் இருந்து பறந்த கடிதம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

Oct 14, 2024 - 09:12
Oct 14, 2024 - 09:50
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தலைமைச் செயலாளரிடம் இருந்து பறந்த கடிதம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையில் அடுத்த இரண்டு நாட்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவரச கடிதம் எழுதியுள்ளார்.  

வருகிற 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவசர கடிதம் எழுதியுள்ளார். 

அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பர்களுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்படுள்ளது. 

அதன்படி, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow