தாய் இல்லாமல் நான் இல்லை... எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய மாஜி!

எம்ஜிஆர் பாடல் பாடி முதியோர்களை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Oct 2, 2024 - 07:31
Oct 2, 2024 - 15:53
தாய் இல்லாமல் நான் இல்லை... எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய மாஜி!

கோயம்பேடு அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் அம்மா அறக்கட்டளை சார்பாக முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது முதியோர் தினத்தை முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர், ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய பா.பெஞ்சமின், ”தாய் இல்லாமல் நான் இல்லை” என்ற எம்ஜிஆர் பாடலை பாடி முதியோர்களை புகழ்ந்து பேசினார். அத்துடன், ”நான் அமைச்சராகிய பின்னர் கூட நான் வீடு வரும் வரைக்கும் எனது தாய் கண் விழித்து காத்திருப்பார்” என உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மதுரவாயில் தொகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு வீடு கூட இடிக்கப்படவில்லை என்றும், ஆனால் இந்த ஆட்சியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ”தாய் இல்லாமல் நான் இல்லை” என்ற எம்ஜிஆர் பாடலை பாடி அசத்திய மாஜி அமைச்சர் பா.பெஞ்சமின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow