நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் அவர். தன் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும், தலைமுறைகள் கடந்தும் மக்களால் நினைவுகூறப்படுவார்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80)வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷின் மறைவால் பெரிதும் வருத்தமடைந்தேன். அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் அவர். தன் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும், தலைமுறைகள் கடந்தும் மக்களால் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்”என பதிவிட்டுள்ளார்.
இதேப்போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகரும், தவெக தலைவருமான விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேப்போல் நடிகர்கள் மணிகண்டன், சார்லி, இமான் அண்ணாச்சி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
What's Your Reaction?