திராவிட கட்சிகள் என்னை பார்த்து பயப்படுகின்றன - மன்சூர் அலிகான்
தேர்தல் தீர்ப்பை பிரதமர் மோடி எழுதிவிட்டு மக்களிடம் வந்து தீர்ப்பு கேட்டு நாடகமாடுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் தம்மை பார்த்து பயப்படுவதாக ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டெல்லி மற்றும் காதர்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் மன்சூர் அலிகான் தொழுகை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது, "எனக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. திராவிட கட்சிகளுடன் நானே கூட்டணிக்காக சென்றேன். ஆனால் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். தமிழரை பிரதமர் ஆக்க வேண்டும்" எனக் கூறினார்.
வேலூர் மாவட்டத்தை கொடைக்கானல் போல் மாற்றி அமைக்க வேண்டும். இயற்கை வளத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் பாலாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். மணல் கொள்ளை அடிக்க முடியாது. இவை அனைத்தும் என்னால் தான் செய்ய முடியும். விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் முதலமைச்சர் ஆகட்டும் நான் அமைச்சர் ஆகிறேன் எனக் கூறினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக மக்களவை தேர்தல் உள்ளது. தேர்தல் தீர்ப்பை பிரதமர் மோடி எழுதிவிட்டு மக்களிடம் வந்து தீர்ப்பு கேட்டு நாடகமாடுவதாகவும் மன்சூர் அலிகான் விமர்சித்திருக்கிறார்.
What's Your Reaction?