த.வெ.க.வுக்கு சென்றால் சுத்தமாகிவிடுவாரா விஜயபாஸ்கர்?

"ச ட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியை வறுத்தெடுக்க தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. அதை அமைச்சர்களும், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை" என்றபடியே என்ட்ரி கொடுத்த சுவாமிக்கு, சுக்குமல்லி காபி கொடுத்து வரவேற்ற சிஷ்யை, "அ.தி.மு.க.வில் இருந்து அடுத்து எகிறப்போகும் விக்கெட்டுகள் யார், யார் சுவாமி?" என்ற கேள்வியோடு செய்திக் கச்சேரியை தொடங்கிவைத்தார்.

த.வெ.க.வுக்கு சென்றால் சுத்தமாகிவிடுவாரா விஜயபாஸ்கர்?
aiadmk next wickets political buzz

'த.வெ.க.வுக்கு சனிக்கிழமை என்றாலே ஸ்பெஷல் நாள்தான். பனையூர் கட்சி அலுவலகம் களைகட்டிவிடுகிறது. மாற்றுக் கட்சிகளில் இருந்து, குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து கொத்துக் கொத்தாக குவிந்துவிடுகிறார்கள். அந்த லிஸ்ட்டில் இந்த வாரம் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் திநகர் சத்யா, ஆர்.எஸ். ராஜேஷ் உள்ளிட்டோர் பனையூர் செல்ல நாள், நட்சத்திரம் பார்த்துவருகிறார்களாம்."

"ஓ. த.வெ.கவில் சேர்வதால் விஜயபாஸ்கர் சுத்தமாகிவிடுவாரோ...நல்ல வாஷிங் மிஷின்.. அப்படித்தானே!
'

விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் 'சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 56 லட்சம் ரூபாய் குட்கா சப்ளையர் தரப்பிலிருந்து பெற்றார்' என்று சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. அவரைத்தான் இப்போது தவெகவில் சேர்த்துக் கொள்ள விஜய் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். 'ஊழல் சக்திகளை எதிர்ப்போம்' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் விஜய் மற்றும் அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஜான் ஆரோக்கியசாமி இதை எப்படி அனுமதித்தார்கள், ஊழல் கறைபடிந்த ஒருவர், த.வெ.கவில் சேர்வதால் தூயசக்தி ஆகிவிடுவாரா?" என்கிற விமர்சனம் வலுத்துவருகிறது."
'

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறாரே?"

தனி இயக்கம் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தனக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அப்படியொரு எண்ணம் தனக்கில்லை என்று வெளிப்படுத்தும் விதமாகத்தான் ரஜினி - பாஜக தலைவர்கள் சந்திப்பு அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தலைவர் நயினார். மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரிடம் ரஜினி மனம்விட்டு பேசியிருக்கிறார்.
அப்போது 'அண்ணாமலையை ஆதரிக்கப் போகிறீர்களா? என்று அரவிந்த் மேனன் சிரித்தபடியே கேட்க 'என் ஸ்டேட்மென்ட் பார்க்கவில்லையா, நான் ஏன் அவரைஅடுத்த 22.06.2 திங்கள் அ கடைகள ஆதரிக்க வேண்டும்? என நறுக்குத் தெறித்தாற்போல கேட்டிருக்கிறார் ரஜினி, இதே சப்ஜெட் நீண்டபோது, 'அண்ணாமலைக்காக மட்டும் சுட்சி, 140 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. அவர் நடத்திவந்த வார் ரூமுக்கு மாதம் 30 லட்சம் ரூபாயும். 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சிக்கு ஒரு ஸ்பாட்டுக்கு 25 லட்சம் ரூபாயும் கட்சித் தலைமை செலவழித்தது என அடுக்கியிருக்கிறார் அரவிந்த் மேனன்."
"ம்ம்... உடன்பிறப்புகள் பற்றிய தகவல் ஏதேனும் இருக்கிறதா?"

அ.தி.மு.க.வைத் தொடர்ந்து தி.மு.க.விலும் தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்துக்கு சுணக்கு あじあ தொடங்கியிருக்கிறது தலைமை. குறிப்பாக வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பவர்ஃபுல் மாஜி அமைச்சர், மீசை மாஜி, சென்னை மாஜி மூவரிடம் முதல்கட்டமாக செலவுக் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என தலைமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மூவருமே இதுவரை வாய் திறக்கவில்லை."

புகார் கிளப்பி இருக்கிறாரே நடிகரின் மகள்?" "முதல்வரின் நண்பருக்கு எதிராக ஆம்! விஜய்க்கு நெருக்கமான நண்பர் ஒருவர்மீது பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் திவ்யா சத்யராஜ். தி.மு.க. நிகழ்ச்சியொன்றில் பேசியவர், 'முதல்வருக்கு அடியாள் ஒருவர் இருக்கிறார். அவர் சமூகவலைதளங்களில் மாஃபியாக்களை உருவாக்கி, பெண்களை அவதூறாக பேசிவருகிறார். சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாகக் கூறி பலரின் வாழ்வை அவர் கெடுத்துள்ளார். அவர் பெயர் மிஸ்டர் ஜெ. அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்' என கொளுத்திப் போட இந்த விவகாரம் தவெக தலைமையின் நட்பு வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது"


"விஜய் மீது பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்கிறாராமே?"

 "முதல்வர் விஜய் நாள்தோறும் பிரபலங்களை சந்திப்பதில் மாலை நேரங்களில் திரையுலக பிஸியாகிவிடுகிறார். சமீபத்தில் சினேகா, சிம்ரன், ஷாம் ஆகியோர் முதல்வரை வந்து சந்தித்தார்கள். ஆனால், சீனியர் நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி, விஜய்யை சந்திக்க அனுமதி கேட்டு பல நாட்களாக காத்திருக்கிறார். அவருக்கு கடந்த ஜூன் 17 வரை அனுமதி கொடுக்கவில்லை விஜய். இதனால், மன வருத்தத்தில் இருக்கிறார் ராதாரவி."
'

தி.மு.கவுக்கு எதிராக கதர்ச்சட்டை கூடாரம் கொந்தளிக்கிறதே சுவாமி?

தி.மு.க.வும் காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் இருவரும் பொங்கியிருப்பதுதான் லேட்டஸ்ட் ஹாட் இதே பாணியில் சென்னை மாநகராட்சி கவுன்சிலரான திரவியமும் தி.மு.க. மீது கோபப் பார்வையை வீசியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் நடைபெற்ற மண்டலக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை அகற்றவேண்டும் என போராடி அகற்ற வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு தி.மு.க.வினர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். வரும் ஜூன் 24ம் தேதி சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதே விவகாரம் அங்கேயும் புயலைக் கிளப்பும். எதற்கும் போலீஸார் தயாராக இருப்பது நல்லது" என்றபடி நடைபயிற்சிக்கு புறப்பட்டார் வம்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow