AK ரேஸ்... தளபதி Flag off.. PEAK CINEMA Loading... எத்தனை மணிக்கு தெரியுமா?
அஜித் குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை விஜய் இன்று இரவு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்; ரசிகர்கள் எதிர்பார்க்கும் “AK Race – Thalapathy Flag Off” தருணம் அரங்கேறுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார். இருவரின் ரசிகர்களும் பல ஆண்டுகளாக போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரையும் இணைக்கும் வகையில் வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் நடைபெற உள்ள மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கிறார். இந்த நிலையில், அஜித்குமார் பங்கேற்கும் இந்த பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
அஜித்தின் ரேஸை தொடங்கி வைக்கும் விஜய்
லீ மான்ஸ் கோப்பை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோனில் சிறப்பு விருந்தினர் பச்சைக் கொடியை அசைத்து வைத்து போட்டியை தொடங்க வைக்க உள்ளார் C. Joseph VIJAY” எனக் குறிப்பிடப்பட்டு, விஜய்யின் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.
மேலும், இந்திய வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய் பிரிட்டனில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 44 கார்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியை விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில்வர்ஸ்டோனில் அஜித்
இதனிடையே, அஜித்குமார் சில்வர்ஸ்டோனில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது பங்கேற்பை உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “கார்கள் முழங்குவதற்கு முன்பு, அணி சில்வர்ஸ்டோனின் ஒவ்வொரு பகுதியையும் நடந்து பார்க்கிறது. வளைவுகள், சாலையின் ஏற்ற இறக்கங்கள், பிரேக்கிங் பகுதிகளை ஆய்வு செய்கிறது. உண்மையான பந்தயம் இங்குதான் தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அஜித்குமார் கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் பங்கேற்கும் போட்டியை விஜய் தொடங்கி வைக்க உள்ள சம்பவம் இருவரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“வரலாற்று தருணம்” எனக் கொண்டாடும் ரசிகர்கள்
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பல ஆண்டுகளாக இரு நட்சத்திரங்களையும் ஒப்பிட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் ஒரே கார் பந்தய நிகழ்வில் இடம்பெறுவது ரசிகர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“முதலமைச்சர் விஜய் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்கிறார். அஜித் கியரை மாற்றி அனைவரையும் பின்னுக்குத் தள்ளிச் செல்கிறார். சினிமாவின் உச்சக்கட்ட காட்சி போல இருக்கப் போகிறது” என ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், இந்த தருணத்தை “வரலாற்று சிறப்புமிக்கது” எனக் குறிப்பிட்டு, போட்டியைக் காண ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி இன்று(செப்.,12) இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரவு 11.45 மணிக்கு போட்டி நிறைவடைய உள்ளது. அஜித்குமார் பங்கேற்கும் இந்த பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதால், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் தற்போது சில்வர்ஸ்டோன் பக்கம் திரும்பியுள்ளது.
What's Your Reaction?