புதுசா இருக்குண்ணே...புதுசா இருக்கு...வடிவேலு பாணியில் தெருவை காணவில்லை என குற்றச்சாட்டு

காணாமல் போன எங்களுடைய தான்தோன்றி அம்மன் தெருவை மீண்டும் கண்டுபிடித்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sep 26, 2024 - 13:09
புதுசா இருக்குண்ணே...புதுசா இருக்கு...வடிவேலு பாணியில் தெருவை காணவில்லை என குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் ஊராட்சியில் உள்ள வேடவாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதே கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தான்தோன்றி அம்மன் தெருவில் ரூ.9 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதற்கான கல்வெட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 4 மாதங்களுக்குப் பிறகு வேடவாக்கம் கிராமத்தில் உள்ள தான்தோன்றி அம்மன் தெருவில் வைக்கப்பட்ட கல்வெட்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் மாநில நிதி குழு மானியத்தின் கீழ் மேடவாக்கம் பாரதியார் தெரு பேவர் பிளாக் சாலை அண்டவாக்கம் என ஊராட்சி பெயரை மாற்றி எழுதி உள்ளனர் அதுவும் பெயர்களை தவறாக எழுதியுள்ளனர். 

வேடவாக்கம் கிராமத்தில் தான்தோன்றி அம்மன் தெருவில் பாரதியார் தெரு என ஏற்கனவே வைக்கப்பட்ட கல்வெட்டில் இருந்த எழுத்துக்களை அழித்து மீண்டும் தெருவின் பெயரை தவறாக எழுதி போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர்.

அண்டவாக்கம் ஊராட்சியில் செந்தமிழ் நகர் பகுதியில் பாரதியார் தெருவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டிருந்தது. முழுவதுமாக அந்த சாலை போடப்படவில்லை.ஆனால் அந்த சாலை பணிக்கான கல்வெட்டு பக்கத்து கிராமமான வேடவாக்கம் தான்தோன்றி அம்மன் கிராமத்தில் அமைத்து இருப்பது அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், ஒரு கிராமத்தின் தெரு பெயர் மற்றொரு கிராமத்தில் உள்ள போல தெரு பெயரை அழித்து ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றியுள்ளனர்.இதில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை என முக்கிய ஆவணங்களில் தெரு பெயரை மாற்ற வேண்டுமா என குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த சாலை போடும் பணியில் ஏதேனும் ஊழல் செய்துள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.  

ஆகவே, காணாமல் போன எங்களுடைய தான்தோன்றி அம்மன் தெருவை மீண்டும் கண்டுபிடித்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow