+1 பொதுத்தேர்வு.. 6,132 மாணவர்களின் நிலை என்ன பதில் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை

2023 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 6 ஆயிரத்து 132 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதது தெரியவந்துள்ளது.

May 14, 2024 - 15:48
May 15, 2024 - 10:30
+1 பொதுத்தேர்வு.. 6,132 மாணவர்களின் நிலை என்ன பதில் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று ரிசல்ட் வெளியாகியுள்ளது. 91.17 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு 7 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, கடந்த கல்வியாண்டில் பிளஸ் ஒன் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 6 ஆயிரத்து 132 மாணவர்களின் நிலை என்ன ஆனது என்ற விபரம் பள்ளிக் கல்வித் துறையிடம் இல்லாதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஆண்டு ஏழு லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றதாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கும் பொழுது, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வை 7,710 பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதாமல் இருக்கும் 6ஆயிரத்து 132 மாணவர்களின் விவரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் நிலையை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து வரும் நிலையில் இந்த 6132 மாணவர்களின் நிலை என்ன ஆனது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow