உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

2050 ஆம் ஆண்டில், உலகளவில் அதிக உடல் பருமன் உடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.8 பில்லியனாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 1.8 பில்லியன் அளவிலான ஆண்களும் மற்றும் 1.9 பில்லியன் அளவிலான பெண்களும் அதிக எடை கொண்டவராக திகழ்வார்கள்.

Mar 4, 2025 - 13:23
Mar 8, 2025 - 15:23
உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
obesity Lancet study

The Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையானது இந்தியர்கள் மத்தியில் புதிய அச்சத்தை எழுப்பியுள்ளது. அறிக்கையின் படி, 2050 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் சுமார் 440 மில்லியனுக்கும் (அதாவது 45 கோடி) அதிகமான மக்கள் அதிக உடல் பருமன்/ எடை கொண்டவராக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் பருமன் அவ்வளவு பெரிய பிரச்சினையானு உங்களுக்குள் கேள்வி எழும்பலாம். ஆனால், சமீபத்தில் மனிதர்களுக்கு உடல் சார்ந்து உண்டாகும் பல பிரச்சினைகளுக்கு அடிப்படையாக விளங்குவது உடல் பருமன் தான்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் ”Global Burden of Disease" (2021) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலான ஆய்வின் இறுதி பகுப்பாய்வு தான் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

உடல் பருமன்: காத்திருக்கும் ஆபத்து

ஆய்வின்படி (2021), ஏற்கனவே உலகில் நடுத்தர வயதில் ஒரு பில்லியன் அளவிலான ஆண்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெண்கள் அதிக எடை மற்றும் பருமன் கொண்டவராக இருக்கிறார்கள். இந்தியாவில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 180 மில்லியனுக்கும் (18 கோடி) அதிகமாக இருந்தது. இதில் 81 மில்லியன் எண்ணிக்கையிலான ஆண்கள் மற்றும் 98 மில்லியன் எண்ணிக்கையிலான பெண்கள் அடங்குவர்.

2050 ஆம் ஆண்டில், உலகளவில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.8 பில்லியனாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 1.8 பில்லியன் அளவிலான ஆண்கள் மற்றும் 1.9 பில்லியன் அளவிலான பெண்கள் அதிக எடை கொண்டவராக திகழ்வார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்தியா:

உலகளவிலான நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக நபர்கள் அதிக உடல் பருமனை கொண்டவராக விளங்குவார்கள் என அறிக்கையின் பகுப்பாய்வு முடிவு வாயிலாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு வாக்கில் 45 கோடிக்கும் அதிகமான நபர்கள் உடல் பருமனால் அவதிப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 22 கோடி அளவிலான ஆண்கள் மற்றும் 23 கோடி அளவிலான பெண்கள் அடங்குவர். சீனா, இந்தியாவினை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில் மற்றும் நைஜீரியா முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களை பிடிக்கும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அறிக்கையில் வயது வாரியான பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்தியாவில் 2050 ஆம் ஆண்டு வாக்கில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 30 மில்லியன் சிறுவர், சிறுமிகள் அதிக உடல் பருமனை கொண்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 40 மில்லியன் நடுத்தர வயதினர் அதிக உடல் பருமனை/எடையினை கொண்டிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Read more:

World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?

கைவிரித்தது அமெரிக்கா- என்ன செய்யப் போகிறது உக்ரைன்?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow