நீங்கள் வேலையில்லா பட்டதாரியா?-கவலை வேண்டாம்:அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்

ஜிஎஸ்டி மற்றும் கிரீம்பன் விவகாரம் குறித்த கேள்விக்கு, தான் தற்போது வேறு துறையில் இருப்பதால், இது குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை.

Sep 26, 2024 - 14:13
நீங்கள் வேலையில்லா பட்டதாரியா?-கவலை வேண்டாம்:அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்

கோவை விளாங்குறிச்சி பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய துறை இந்த தகவல் தொழில்நுட்பத்துறை தான். பல காரணங்களால் கட்டிட கட்டுமான பணிகள் தாமதம் ஆனாலும், உரிய விதிமுறைகளை பின்பற்றி சான்றிதழ்கள் பெற்று முறையாக திறக்கப்படும்.

இதன் மூலமாக 3250 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சில நிறுவனங்கள் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா இடத்தை முழுவதுமாக தங்கள் நிறுவனத்திற்கு கேட்கிறது.ஆனால் அது நியாயமாக இருக்காது. புதிய தகவல் தொழில் பூங்கா கட்டுமான பகுதியில், குறைந்தது 15 ஆயிரம் சதுர அடியாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

நிதித்துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சீர்திருத்தம் செய்யவே என்னை முதலமைச்சர் இங்கே அனுப்பி இருக்கிறார். துறையில் சில இடங்களில் தகவல் தொடர்பில் திருத்தம் தேவைப்படுகிறது. அரசில் உள்ள துறைகள், ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லாமல், சில மாற்றங்களுடன் செயல்பட வேண்டும். வட சென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இரு ஆண்டுகளுக்கு  முன்பே நிதிநிலை அறிக்கையில் இதனை தெரியப்படுத்தி இருக்கிறேன். 

மேலும், ஜிஎஸ்டி மற்றும் கிரீம்பன் விவகாரம் குறித்த கேள்விக்கு, தான் தற்போது வேறு துறையில் இருப்பதால், இது குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை. பொதுவாக ஜிஎஸ்டி பற்றிய அறிக்கை போன்ற கடிதம் ஒன்றை தயாரித்து மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow