ஆம்ஸ்ட்ராங் கொலை : முக்கிய குற்றவாளியை தட்டித்தூக்க துபாய் விரையும் போலீஸ்

ரவுடி சம்போ செந்தில் துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை காவல்துறை துபாய் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

Oct 7, 2024 - 18:47
ஆம்ஸ்ட்ராங் கொலை : முக்கிய குற்றவாளியை தட்டித்தூக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறை துபாய் நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கொலைக்கு காரணமான ரவுடி நாகேந்திரன், அஞ்சலை, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைதான 25 நபர்கள் மீது குண்டாஸ் பதியப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை தாக்கல் செய்தது. அதில் ஏ1 நபராக நாகேந்திரன், ஏ2 நபராக சம்போ செந்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில்,ரவுடி சம்போ செந்தில் தொடர்ந்து வெளி நாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.இதனால் ரவுடி சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இண்டர்போல் உதவியுடன் மூலமாக தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் நோடல் அதிகாரி உதவியுடன் சென்னை காவல்துறையினர் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க விமானம் மூலமாக துபாய் நாட்டிற்கு விரைந்துள்ளனர்.  குறிப்பாக ரவுடி சம்போ செந்தில் துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை காவல்துறை துபாய் நாட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் சில நாடுகளுக்கும் சென்னை காவல்துறை தனிப்படை போலீசார் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow