வீட்டிற்குள் புகுந்து மங்கி குல்லா கொள்ளையர்கள் செயின் பறிப்பு

இரண்டு மர்ம நபர்கள் தனியாக இருந்த பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்து சென்றனர்.

Nov 28, 2023 - 17:26
Nov 29, 2023 - 07:17
வீட்டிற்குள் புகுந்து  மங்கி குல்லா கொள்ளையர்கள் செயின் பறிப்பு

வீட்டிற்குள் புகுந்து மங்கி குல்லா கொள்ளையர்கள் தனியாக இருந்த தாய்,மகளிடம் இருந்து செயினை பறித்து கொண்டு,தங்கள் கைரேகை பதிவை துணியால் துடைத்து விட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம்-இந்திராணி தம்பதியினர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டிற்குள் மங்கி குல்லாவால் முகத்தை மூடி மேலாடை அணியாமல் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் தனியாக இருந்த பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்து சென்றனர்.

இதில் ஹைலைட்டாக கதவில் பதிந்து இருந்த தங்கள் கைரேகைகளை துணியால் துடைத்து விட்டு தப்பி செல்லும் காட்சிகள் அனைத்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த சிசிடிவி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மங்கி குல்லா கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow