உத்தரகாண்டில் வன்முறை: 4 பேர் உயிரிழப்பு-கண்டதும் சுட உத்தரவு
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இடிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் மசூதி மற்றும் இஸ்லாமிய கல்விச் சாலை ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அவற்றை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் மசூதி மற்றும் கல்விச்சாலையை இடிக்க முற்பட்டபோது ஹல்த்வானி மற்றும் வன்புல்புரா பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அங்கு பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிக்கி பாதிப்படைந்துள்ளனர்.
வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இடிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அப்பகுதிக்கு ஊழியர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
What's Your Reaction?