வெஜ் பிரியாணிக்கு பதிலா சிக்கன்.. அழுது புலம்பிய பெண்: ஹோட்டல் உரிமையாளர் கைது

ஆன்லைனில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு, சிக்கன் பிரியாணியினை அனுப்பி வைத்த ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 8, 2025 - 10:50
வெஜ் பிரியாணிக்கு பதிலா சிக்கன்.. அழுது புலம்பிய பெண்: ஹோட்டல் உரிமையாளர் கைது
chicken briyani delivered instead of veg biryani

நொய்டா பகுதியினை சேர்ந்தவர் சாயா சர்மா. இவர் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சைத்ரா நவராத்திரியினை கடைப்பிடித்து வந்தார்கள் (மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரை). இந்நிலையில், நவராத்திரி நாளான்று வெஜ் பிரியாணியினை ஆன்லைனில் (ஸ்விக்கி ஆப் வாயிலாக) ஆர்டர் செய்துள்ளார் சாயா சர்மா.

உணவு டெலிவரி செய்த நபர் சிக்கன் பிரியாணியினை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சாயாவும் இதுத்தெரியாமல், சாப்பிடத் தொடங்கியுள்ளார். சிறிது நேரத்தில் இறைச்சித்துண்டுகள் கண்ணில் படவும் அதிர்ந்து போயுள்ளார். உணவகம் வேண்டுமென்றே தனக்கு அசைவ உணவை அனுப்பியதாகக் கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

எனக்கு மன உளைச்சலா இருக்கு..

தனது காணொளியில், ”ஸ்விக்கி ஆப் வழியாக லக்னோவி கபாப் பராத்தாவிலிருந்து ஒரு வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்தேன். ஆர்டர் கிடைத்ததும், அது அசைவம் எனத் தெரியாமல் சாப்பிடத் தொடங்கினேன். பின்பு தான் அது அசைவ உணவு என்பதை உணர்ந்தேன். நான் ஒரு சுத்தமான சைவப் பெண், நவராத்திரியின் போது இந்த அசைவ பிரியாணியை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். இது எனக்கு பெரும் மன உளைச்சலை தருகிறது" என்று அவர் அழுதுக்கொண்டே பேசுகிறார்.

மேலும், " இதைச் செய்தவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார். நான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தபோது அவர்களால் எப்படி அசைவத்தை அனுப்ப முடியும்," என்று கேள்வியும் எழுப்பியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவியது.

சாயா சர்மாவின் காணொளிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவக உரிமையாளர் கைது

ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே, நொய்டாவில் உள்ள அம்ரபாலி லீஷர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லக்னோய் கபாப் பராத்தா ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கௌதம் புத்த நகர் காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ X வலைத்தளத்தில், ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

“டெலிவரி செய்யும் போது தவறுதலாக கூட உணவினை மாற்றி அனுப்பியிருக்கலாம். இது வழக்கமாக நடைப்பெறக்கூடிய ஒன்று. இந்த சம்பவத்திற்கு இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் அடிப்படையில், ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்?” என சமூக வலைத்தளங்களில் பலர் இந்த கைது நடவடிக்கையினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow