டெல்லி டூ பரந்தூர்... மே 4ல் பறந்த Phone Call.. திமுகவிற்கு துரோகம் செய்தததா காங்கிரஸ்?

”காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது' என்கிறது தி.மு.க. ஆனால், 'தி.மு.க.விடம் தெரிவித்துவிட்டுத்தான் விலகினோம்' என்கிறார் சிதம்பரம். எது உண்மை? 

டெல்லி டூ பரந்தூர்... மே 4ல் பறந்த Phone Call.. திமுகவிற்கு துரோகம் செய்தததா காங்கிரஸ்?

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தாலும், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கூட்டணி ஆட்சியை அமைத்தது தவெக. ஆனால், இந்த கூட்டணி ஆட்சியில் முதல் ஆளாக தவெகவிற்கு ஓடி சென்று Volunteer ஆக ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ். கூட்டணிக் கட்சியான திமுகவிடம் கூட ஒரு பேச்சுவார்த்தை நடத்தாமல், கொள்ளைப்புறம் வழியாக பனையூருக்கு சென்று அதிர்ச்சியளித்தனர் கதர்ச்சட்டையினர். 

இதனைத் தொடர்ந்து, இனி எக்காரணம் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைமை அறிவித்துவிட்டது. 
இந்த நிலையில், எதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கூட்டணி வைத்த்து என்பது குறித்து பா. சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.  

அதாவது, தேர்தல் முடிவுகள் வெளியான மே 4ம் தேதி மாலை ஸ்டாலினுக்கு, ராகுல் போன் போட்டு பேசியதாகவும், அதன்பிறகு த.வெ.க. தலைவர் விஜய்யிடம் பேசியதாகவும் கூறியுள்ள பா.சிதம்பரம், உடனே 'உங்க சப்போர்ட் தேவைப்படும்' என விஜய், ராகுலிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

”உடனே, ராகுலும் 'கட்சி நிர்வாகிகளிடம் டிஸ்கஸ் செய்துவிட்டு சொல்கிறேன்' என்று கூறிய நிலையில், தவெ.கவை ஆட்சியில் அமரவிடக் கூடாது என தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வந்தது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதை தடுக்க முடிவெடுத்தோம்” என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார். 

மேலும், “அதிமுக – திமுக இணைவதை தடுக்கவே தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க. கூட்டணியில் சேர்ந்தோம்” என்று கூறியுள்ள பா.சிதம்பரம், தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி வைக்க வந்த முதல் வாய்ப்பு பறிபோன நிலையில், இரண்டாம் வாய்ப்பை பயன்படுத்தி த.வெ.க கூட்டணி அரசில் இணைந்தோம் என்று விளக்கமளித்துள்ளார். 

பா.சிதம்பரத்தின் இந்த பேச்சு, பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம், விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் அதிமுக – திமுக இணைவு குறித்த பேச்சுகள் 5 ஆம் தேதிக்கு மேல் தான் இருந்தன என்று கூறும் நிலையில், ரிசல்ட் வந்த உடனேயே ஓடிச் சென்ற காங்கிரஸ் எப்படி இதனை ஒரு காரணமாக கூற முடியும் என்று கேள்விகள் எழுப்புகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow