ஒய் பிளஸ் பாதுகாப்பில் ஓட்டை..! பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச்சூடு... விசாரணையில் கிடைத்த துப்பு...

Apr 14, 2024 - 15:55
ஒய் பிளஸ் பாதுகாப்பில் ஓட்டை..! பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச்சூடு... விசாரணையில் கிடைத்த துப்பு...

பாலிவுட் நடிகர் சல்மான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

துப்பாக்கி சத்தம் கேட்டு சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 
 
நடிகர் சல்மான் கானுக்கு ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக குற்றவாளிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டாக்களின் கூடுகளை கைப்பற்றி, எந்த ரக துப்பாக்கி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow