இந்த Dress-அ வாங்கி போடுங்க... 30% ஆஃபர் அறிவித்த முதலமைச்சர் விஜய்..!

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Oct 1, 2026 - 15:15
இந்த Dress-அ வாங்கி போடுங்க... 30% ஆஃபர் அறிவித்த முதலமைச்சர் விஜய்..!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நெசவாளர்கள், நூற்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கதரின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவது உள்ளூர் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கு ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கதர் ஆடையை வாங்குவது வெறும் ஆடை வாங்கும் விஷயம் மட்டுமல்ல; அதன் பின்னால் இருக்கும் நெசவாளரின் உழைப்பை மதிப்பதற்கான ஒரு வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கதர் வாங்கினால் 30% தள்ளுபடி!

இதற்கிடையே பொதுமக்களுக்கு ஒரு முக்கிய சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கதரங்காடிகளில் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காலத்துக்கு ஏற்ப மாறும் கதர்!

இன்றைய சூழலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு உலகளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை நவீன வடிவமைப்புகளில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மின்னணு வணிகத் தளங்கள் மூலமாகவும் இந்தப் பொருட்களை மக்கள் எளிதாக வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மகிழ்வுடன் அணிவோம் கதராடைகளை... வெற்றி பெறச் செய்வோம் நெசவாளர் வாழ்க்கையை” என்ற வேண்டுகோளுடன், தமிழக மக்கள் கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி உள்ளூர் உழைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow