திமுக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா.. "டோக்கன் பத்தல".. நிர்வாகியோட பெண் வாக்குவாதம்
ஈரோடு மாவட்டம் பபள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக வழங்கப்பட்ட டோக்கன் போதவில்லை என, பெண் ஒருவர் திமுக நிர்வாகியிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர் பிரகாஷ். இவர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் பிரகாஷ் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, சாலையில் இரு புறமும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், நீண்ட தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், வேட்பாளர் பிரகாஷ் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்ற பின், கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அப்போது, தான் 74 நபர்களை கூட்டி வந்ததாகவும், ஆனால் 70 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெண் ஒருவர் திமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதோடு, திமுக தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால், 100 ரூபாய் பணம் மற்றும் தட்டு வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டதாக அப்பெண் தெரிவித்தார். மேலும் 70 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதாகவும் அந்த பெண் கூறினார். டோக்கன் மூலம் பிரசார கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்து, திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது
What's Your Reaction?