தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்- திமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

எம்.எல்.ஏ. மகனை போலீசார் 100 நாட்களுக்கு பிறகு கைது செய்த சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 30, 2024 - 20:10
தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்- திமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

குமரி மாவட்டம், தக்கலை குமாரபுரம் அருகே உள்ள பெரும்சிலம்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபுரம் பகுதியில் இருந்து பெரும்சிலம்பு நோக்கி வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான் கென்னடியின் வயிற்றில் குத்திவிட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில் ஜான் கென்னடியை கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது பத்மநாபபுரம் சட்டமன்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ தியோடர் ரெஜினால்டு மகன் ஆனந்த் பிலிசிங் என தெரியவந்தது.இதனைதொடர்ந்து கொற்றிகோடு போலீசார் அவரை கைது செய்தனர்.

தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் எம்.எல்.ஏ. மகனை போலீசார் 100 நாட்களுக்கு பிறகு கைது செய்த சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow