மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த வைரமுத்து - காரணம் இதுதான்!

வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Nov 29, 2024 - 18:41
மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த வைரமுத்து - காரணம் இதுதான்!

புகழ்பெற்ற கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவின் தொடர்ந்து திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி வருகிறார். இவர் எழுதிய வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த தானம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல. தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் ம‌ழை போன்ற கவிதை தொகுப்புகள் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபகளிடம் விருது பெற்றிருக்கிறார்.

இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

வைரமுத்து படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. உலகெங்கிலுமிருந்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள்.

கருத்தரங்கம் நாள் முழுவதும் நிகழவிருக்கிறது. மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று வைரமுத்து நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow