தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விஜய் பெற்றுத் தருவாரா?
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, வாழை, கத்தரி, வெண்டை, பாகல், புடலை, பீர்க்கன், முள்ளங்கி, கீரைகள் மற்றும் பூ வகைகளில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஆனால், தண்ணீர்? தொடர்ந்து இக்கட்டுரையைப் படியுங்கள்
தற்போது சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தாங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில், பத்துக்கட்டு, சிங்கானோடை, காழியப்பநல்லூர், இலப்பூர், நவ்லாடை, கொத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மணல் பாங்கான இடத்தில் அந்தந்த பகுதி நிலத்தின் தன்மைக்கு ஏற்றபோல் பயவகையான காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நிலத்தடி நீரை பம்பு செட் மூலம் பாய்ச்சி பயிர்களை ஓரளவுக்கு காப்பாற்றி வந்தனர். நல்ல விளைச்சல் இருந்த நிலையில், கடத்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்திற்குச் சென்றது. இதனால் தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறி செடிகள் அனைத்திலும் பூக்கள் கருகிய நிலையில் உதிர்வதோடு செடிகளும் வாடி வதங்கி வருகின்றன. இதில் புடலங்காய், பீர்க்கன், பாகற்காய் கொடிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே வெம்பும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது ஆறு அடி வரை வளரும் புடலங்காய் இரண்டு அடியிலேயே வெம்பி சூம்பி கீழே விழுந்துவிடுகிறது.
வேளாண் அதிகாரிகள் அலட்சியம்
வாடிய பயிர்களை நாள்தோறும் கவலையோடு பார்த்து வரும் விவசாயிகளிடம் பேசினோம். "நெல் பயிரிடுவது பெரும் நஷ்டத்தை கொடுக்கிறது என தோட்டக்கலை பயிர்கள் பயிரிட்டால் கடுமையான கோடை வெப்பத்தால் அவற்றை சிரமப்பட வேண்டியதாக உள்ளது இதிலும் நஷ்டம்தான் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே வேளாண் அதிகாரிகள் ஆலோசனை தருவதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்னர் அறிக்கைகள் மூலம் ஆலோசனைகளை அளித்துவிட்டு அமைதியாகிவிடுகின்றனர்"என்றனர் சோகத்துடன்.
இதேபோல் முந்திரி மரங்களும் கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் உதிர்தல் முந்திரி காய்கள் பழமாவதற்கு முன்பே வெம்பிப்போதல் என்றபடி பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது" என்று முந்திரி சாகுபடி விவசாயிகளும் புலம்பி வருகின்றனர். அவர்களிடமும் பேசினோம் "60,70,ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடி பகுதியில் நிறைய முந்திரி மரங்கள் இருந்தன. தற்போது முந்திரி மாங்களை செங்கல் சூளை விறகிற்காக அழித்து வருகின்றனர். வருடங்களுக்கு முன்னா முன்னோர்கள் வனர்த்து ஆளாக்கிய முந்தி! மரங்களை நாங்கள் இப்போது காப்பாத்தி வருகிறோம்.
முந்திரி அறுவடை திருப்தி இல்லை
கோடை வெப்பத்தில் முந்திரி மரங்கள் பாதிக்கப்பட்டாலும் சிவப்பு, மஞ்ச நிறங்களில் உள்ள பழங்களை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளோம். இனிப்பு மற்றும் லேசான துவர்ப்பு சுவை கொண்ட இந்தப் பழத்தில் ஆரஞ்சு பழத்தை வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துகள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இது மனித நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதா உடலுக்கு குளிர்ச்சி தந்து ரத்த மற்றும் செரிமாணப்பிரச்சனை செய்ய உதவுகிறது. முந்திரிக்கொட்டை பயன்பாடு என்பது தனி தற்போது வெப்பத்திலிருந்து முந்திரியைக் வேளாண் துறை அதிகாரிகள் பெற்று வருகிறோம். இருந்தாலும் திருப்திகரமாக இல்லை" என்றனர். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தோட்டப்பயிர்களை எப்படி காப்பாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன! என்பது குறித்து நாகை மாவட்ட தோட்டககலை துணை இயக்குநர் பரிமேலழகன், உதவி இயக்குநர் முகம்மது சாதிக் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் ஆகியோர் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
மூடாக்கு முறை கைகொடுக்கும்!
நீர்ப்பாசனம் செய்ய சொட்டு நீர் பாசனம் அமைத்தல் மிகவும் நல்லது. களைக்கட்டுப்பாடு செய்ய முடாக்கு பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் மலர்களுக்கு நண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். அதிகாலை அல்லது மாலை நேரங்களில் நண்ணீர் பாய்ச்சுவதால் நீர் ஆவியாதல் குறையும். பல்லாண்டு பயிர்களுக்கு தென்னை நார்க்கழிவுகள், அல்லது இழை தளைகளைக்கொண்டு மூடாக்கு போடுதல் நல்லது. பாய்களைப் பயன்படுத்தியும் மூடாக்கு போடலாம் அதிக வறட்சி நிலவும் போது பொட்டாசியம் குளோரைடு அரை சதவிகித கரைசலை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பது இலைகள் வழியாக நீர் ஆவியாதலைத் தடுக்கும். களைச்செடிகள் அதிகமாகத் தென்படும்போது அதை முடாக்காக போட்டு நீர் வீணாவதைத் தடுக்கலாம். எலுமிச்சை, கொய்யா, மற்றும் காய்கறிப்பயிர்களுக்கு அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் சுத்தமான நீரைத் தெளித்து விடுவதன் மூலம் வெப்பத்தைக் குறைத்து பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கலாம்.
5 முதல் 6 மாதங்கள் வளரும் காய்கறி பயிர்களைக் குறைத்து முதம் மாதங்கள் மட்டுமே வளரக்கூடிய பயிர்கலை அதிக அளவு பயிரிடலாம். மேலும் பீர்க்கள், புடவை பயிர்களில் பழ அதிகம் காணப்படுவதால் மெத்தில் யூஜினால் பொறிகள் ஒரு ஏக்கருக்கு வீதம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் படி ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு கிலோ இட வேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல சத்துக்கலவையை 100 கிராம் அளவுக்கு இட வேண்டும் மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 தழைச்சத்தை இட வேண்டும்" என்கிறார்கள் அவர்கள்.
தோட்டக்கலைத்துறை அறிவுரை
இதேபோல, பருவம் தவறி பெய்யும் மழையால் தோட்டப்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து நாகை மாவட்டம் திருமருகல் வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் பாண்டியன் விரிவாக பேசினார் "பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்சேதம் ஏற்படலாம். பொதுவாக மழைக்காலங்களில் வெப்பத்தன்மை குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகமானதால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் பகலில் அதிகம் தென்படும். இதற்கு இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 15 வீதம் வைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம் இரவு நேரங்களில் விளக்கு பொறிகளை வைத்து பெண் பூச்சிகளை அழிப்பதன் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.பெண் பூச்சிகளை அழிப்பதன் மூலம் அவைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதைத் தவிர்க்க முடியும்.காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய் மற்றும் கொடி காய்கள் ஆகியவற்றிற்கு முறையாக மண் அணைப்பதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுதவதைத் தடுக்கலாம்.
காய்கறி பயிர்கள் நடவிற்கு திறந்த வெளியில் நாற்றங்கால் அமைப்பதை தவிர்த்து குழித்தட்டு முறையில் பாதுகாக்கப்பட்ட நிழல் குடில்களில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நுண்ணுயிரியை மக்கிய தொழு உரத்துடன் கடந்து பயிர்களுக்கு இடுவதன் மூலம் வாடல் நோய்களின் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாழைத்தாரர்களை மூடுவதன்சுற்றி மண் அணைத்தும் சவுத்தி குச்சிகள் மூலம் முட்டுக்கொடுத்தும் சாய்வதைத் தவிர்க்கலாம் உறைகளைச் கொண்டு வாழைத்தார்களை மூடுவதன் மூலம் மழைநீர் நேரடியாக காய்களில் பட்டு காய்கள் பாதிக்கப்படுவதையும் நோய்களிலிருந்தும் பாதுாக்கலாம்.90 சதவிகிதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.மா, பலா, போன்ற பல்லாண்டு பயிர்களின்த மரக்கிளை இடையே காற்று புகுந்து செல்லஇலகுவாக இருக்கும்படி பக்கக்கிளைகளை அகற்ற வேண்டும். இதனாய் மரங்கள் சாய்வதைத் தவிர்க்கலாம் என்றார்.
இதற்கிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு டெல்டா பகுதி விவசாலயிகள் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்வதற்கு ஜூன் 12 ம் தேதி தண்ணீர் இறப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லை. சட்டசபைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் ஏப்ரல் 29-ம் தேதி காவிரி மேவாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற இறுதி தீா்ப்பில் மே மாதம் தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் திறக்க வேண்டிய 2.30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனை காவிரி ஒழுங்காற்றுக்குழு கண்காணித்துச் செயல்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழக முதவராக விஜய் பொறுப்பேற்பதற்கு முதலில் ஆதரவு கர்நாடக கட்சிதான் கர்நாடக அரசு எப்போதும் சட்டத்தையும், காவிரி ஆணைய உத்தரவையும் மதிப்பதே இல்லை.கர்நாடக மாநில அணைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போக்கை கடந்த 50 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.
எனவே,காவிரி தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு எவ்வாறு கையாளப்போகிறது. என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வேலையில் விஜய் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் நேரடியாகப் பேசி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகவிடம் இருந்து பெற்று மேட்டுர் அணையை ஜூன் 12ம் தேதியும்,கல்லணையை முதல்வரே நேரில் வந்து திறந்துவிடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டாலுக்கு ரூ.3500ம்,கரும்பு டன்னுக்கு ரூ.4500ம் வழங்குவதாக தேர்தலில் அளித்த வாக்குறுதியையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் புதிய அரசு பாதுகாக்க வேண்டும்.
எழுதியவர்-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?