பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒருமையில் அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர்..!
“நான் இங்கேயே பாய் போட்டு படுத்துக் கொள்ளட்டுமா?”
நாற்றம்பள்ளி அருகே திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒருமையில் அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயன செருவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிதிவண்டியை நிறுத்துவதற்கான கொட்டகை அமைப்பதற்காக திட்ட இயக்குனர் செல்வராசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 4.30 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அதற்கான பணி ஆணையை வழங்கியிருந்தார்.